1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள் என்ன?

கொண்டைக்கடலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஊறவைத்த கொண்டக்கடலையை தினமும் சாப்பிடுவது ஆண்மையை அதிகரிக்கும்.

கொண்டைக்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடல் எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. இதில் உள்ள போலேட் மூளையின்  செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
 
கருப்பை குழாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. கரு வளர்ச்சிக்கு போலிக் அமிலம் உதவுகிறது.
 
கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம் சத்து இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.