1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

முகத்தின் பொலிவை அதிகரிக்கும் சில அற்புத அழகு குறிப்புகள்!!

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவ, சரும சுருக்கங்களைப் போக்கி வழுவழுப்பாகும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் 15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தின் கருமை நீங்குவதோடு சரும  சுருக்கமும் மறையும்.
 
அரை டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிதளவு ஆரஞ்சு ஜூஸ் கலந்து முகம், கை கால்களில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.  நல்ல நிறமாற்றம் உண்டாகும்.
 
பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தேய்த்து 2 நிமிடம் கழித்து கழுவவேண்டும். முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்குவதோடு முகத்திற்கு  புத்துணர்வையும் கொடுக்கும்.
 
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவாகும்.
 
எலுமிச்சை சாற்றுடன் நீர் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி  தினமும் செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
 
மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு  அதிகரிக்கும்.
 
தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. எனவே அந்த தேனை தினமும் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான  நீரில் கழுவினால் நல்ல மாற்றம் உண்டாகும்.