திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இந்த ஒரு பழத்தில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...!!

மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் செரிமானத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்சைம்களை உற்பத்தி செய்வதில் மாதுளை முக்கியப் பங்கினைக் கொண்டுள்ளது. மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம்,  தலைசுற்றுதல், களைப்பு மற்றும் சோர்வினைக் குணப்படுத்துகிறது.
மாதுளைப்பழத்தில் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் முடிக்கு உகந்த ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இவை முடி வளர்ச்சிக்கும், முடியின் வேர்க்கால்களை வலிமை அடையச் செய்கிறது. மேலும் வைட்டமின் ‘ஏ’ உச்சந்தலையினை அதிக  முடியினைத் தயாரிப்பதற்காக ஊக்குவிக்கிறது.
 
மாதுளைப் பழச்சாறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மற்றும் புற்றுநோய் செல்கள் பரவுவதற்கான ஆபத்தையும்  குறைக்கிறது.
 
முகத்தின் தோலிற்கு மாதுளைப் பழத்தினை முகத் தேப்பானாகக் கூடப் பயன்படுத்தலாம். செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட  முகத்தேய்பான்களை விட மாதுளம் பழத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முகத் தேய்ப்பான் மிக நல்ல பயன்களைக் கொடுப்பதோடு எந்தவித  பக்கவிளைவுகளையும்தருவதில்லை.
 
மூல வியாதிக்கான சிகிச்சையில் மாதுளை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நிச்சயமாகத் தினமும் காலையில் மாதுளைப் பழச்சாற்றுடன் ஒரு  சிட்டிகை உப்பு சேர்த்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு மூன்று மாதங்களுக்குத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பழச்சாற்றில்  உப்பிற்குப் பதிலாகத் தேனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ளுவதன் வழியாக மூல நோயின் தீவிரம் குறையும்.
 
மாதுளைப் பழங்களில் உள்ள அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள்உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து இரத்த சோகையினைக் குணப்படுத்துகிறது.
 
மாதுளைப் பழமானது புரோஸ்டேட் தோல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு உதவுவதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.