ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (14:45 IST)

தலைமுடி உதிர்வு பிரச்சனையை எவ்வாறு சரிசெய்வது...?

முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை சரியாக தெரிந்து கொள்ளாமலேயே, ஹேர் கேர் பொருட்களை பயன்படுத்த தொடங்குகிறோம். 

உடல் ஆரோக்கியத்தை சரியான முறையில் பாதுகாப்பதுதான் முடி உதிர்வை கட்டுப்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்வு  பிரச்சனை இருக்காது. ஆனால் உடலில் இருக்கும் ஏதோ ஒரு இம்பேலன்ஸ் காரணமாக தான் அதிகப்படியாக முடி கொட்டத் தொடங்குகிறது. உடலில் இருக்கும் அந்த பிரச்சனையை சரி செய்யும் வரை முடி உதிர்வை நேரடியாக சரி செய்ய முடியாது.
 
விளக்கெண்ணெய் மிகவும் அதிக டென்சிட்டி கொண்ட எண்ணெய். எனவே, இது அடர்த்தியாக இருக்கும். உங்கள் தலையில் விளக்கெண்ணெய்யைத் தடவும் போது, எண்ணெய்யின் அடர்த்தி மற்றொரு லேயராக உருவாகி உங்கள் கூந்தல் அடர்த்தியாக இருப்பதைப் போல தோற்றத்தை ஏற்படுத்துமே, முடி அடர்த்தியை அதிகரிக்காது.
 
குறிப்பிட்ட இடைவேளைகளில் எண்ணெய் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பது அவசியம் தான். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், வேர்களை பலப்படுத்தும். ஆனால், ஆயில் மசாஜ் செய்வதால் நேரடியாக முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியாது.
 
முடியை நன்றாக வாருவது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் தலையில் இருக்கும் எண்ணெய்யை முடி நுனி வரை கொண்டுவரும். ஆனால் தினமும் பலமுறை வருவது தலையில் எரிச்சலை ஏற்படுத்தும், இது முடியின் வேர்களை பலவீனப்படுத்தி முடி கொட்டுவதை தான் அதிகப்படுத்தும்.