வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:39 IST)

பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்க சில எளிய குறிப்புகள் !!

எலுமிச்சை சாறு பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வாயில் உள்ள கிருமிகள் , துர்நாற்றத்தையும் அழிக்கும். எனவே பேஸ்டுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறையும் ஊற்றி தேய்த்து பாருங்கள் அல்லது தனியாகவும் எலுமிச்சை சாறை பற்களில் தேய்க்கலாம்.

பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
 
கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
 
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாயில் ஊற்றி நன்குக் கொப்பளியுங்கள். நுரை வரும் அளவிற்குக் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மஞ்சள் கறை நீங்கும்.
 
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.
 
2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கலாம்.