வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தை பராமரிக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்...!

வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் தக்காளிசாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
 
முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ்  வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
 
கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவவேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்மறையும்.
 
கடலை மாவு ஆறு டீஸ்பூன், பாலாடை இரண்டு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு 10சொட்டு, கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளிகூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி  வந்தாலும் நல்லது.