வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (15:21 IST)

தலைமுடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்க உதவும் கறிவேப்பிலை !!

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது வேப்பிலையாகும். உபயோகப்படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது.


அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது ‘A’ சத்தாகும். ஆகையினால் இதனை சட்னியாக தயார் செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் கண் சம்பந்தமான எந்த நோயும் அகன்று விடும்.

தேவையான அளவு நார்ச்சத்து உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், மலசிக்கல், சர்க்கரை வியாதி போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். கறிவேப்பிலையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் உங்களுக்கு இளமையான மற்றும் ஒளிரும் சருமம் கிடைக்கும்.

கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை மிகவும் நல்லது. தோல்களில் ஏற்படும் அலர்ஜிகள், நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த கறிவேப்பிலை பயன்படுகிறது.

வலிமையான மற்றும் கருமையான முடியைப் பெறுவதற்கு கறிவேப்பிலை பயன்படுகிறது. மேலும் தலை முடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட  பல பிரச்சனைகளை நீக்கவும் கறிவேப்பிலை பயன்படுகிறது. இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதை தடுக்கும்.