1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும அழகை அதிகரிக்க முக்கிய பங்காற்றும் திராட்சை...!!

திராட்சை பழத்தில் அடங்கியிருக்கும் விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்களால் உடல்நலத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகுக்கும் முக்கிய பங்காற்றுகிறது. சரும அழகை அதிகரிக்க சிகப்பு, பச்சை, கருப்பு என எல்லாவகை திராட்சைகளையும் இதற்கு  பயன்படுத்தலாம்.
திராட்சையில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கிறது. இதனால் சருமத்தை க்ளன்ஸ் செய்திடும். அதிலிருக்கும் அழுக்களை எல்லாம் நீக்கிடும். திராட்சை பழத்தை நான்கைந்து கைகளில் எடுத்து நசுக்கிக் கொள்ளுங்கள் அதன் சாறை அப்படியே தடவலாம்.  சுமார் 10 நிமிடங்கள் காய்ந்ததும் அதனை கழுவிவிடலாம்.
 
திராட்சையில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது. இரவு தூங்குவதற்கு முன்னர் திராட்சை பழத்தை அரைத்து பேஸ் பேக்காக போட்டுக்  கொள்ளுங்கள். இந்த பேஸ் பேக் நம் சருமம் சுருக்கமடைவதை தடுக்கும்.
 
சருமத்தை சூரியக் கதிர்கள் தாக்காமல் பாதுக்காக்க உதவிடும். திராட்சையில் அதிகப்படியான ஃப்ளேவினாய்ட் இருக்கிறது. இதனை ஆன்ட்டி டேன் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதில் திராட்சை முக்கிய பங்காற்றுகிறது. அதில் இருக்கும் ஆல்ஃபா ஹைட்ராஸி ஆசிட் நம் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவிடும்.
 
கருப்பு திராட்சை எண்ணெய்ப் பசையுள்ள சருமத்தினருக்கு மிகவும் நல்லது. கருப்பு திராட்சையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் அந்த பேஸ்ட்டுடன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
 
வறண்ட சருமம் இருப்பவர்கள், திராட்சை அரைத்த விழுது, அவகோடா அரைத்த விழுது, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில்  பேஸ் பேக்காக போடுவதால் மிருதுவான சருமம் கிடைத்திடும்.
 
திராட்சையில் தண்ணீரும் ஃபைபரும் நிறைந்திருக்கிறது. இதனை சருமத்தில் தடவுவதால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் சருமம்  ஆரோக்கியத்துடன் காணப்படும்.