1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:40 IST)

எதற்கெல்லாம் மருந்தாகிறது பீர்க்கங்காய் இலை தெரியுமா...?

நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருந்து வருகிறது பீர்க்கங்காய். அதிலும் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய சக்தி பீர்க்கங்காய் இலைகளுக்கு உள்ளது.


பீர்க்கங்காய் இலைகளை அரைத்து சாறெடுத்து இதை லேசாக சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து விட்டால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் எளிது. ஆகையால் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டும்.

பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் இயற்கையாகவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க கூடிய ஏராளமான மருத்துவ முறைகள் உள்ளது. அதை பயன்படுத்தியும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.