தலைமுடி கருகருவென்று அடர்த்தியாக வளரவேண்டுமா...?
ஒரு கப் தேங்காய்த் துருவலை அரைத்து பால் பிழிந்து வடித்து எடுத்துக் கொள்ளவும். இதை முடியின் மயிர்க்கால்களுக்குத் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறவைத்து, பின் தலைக்குக் குளிக்க வேண்டும்.
இதை வாரம் ஒரு முறை என்ற அளவில் தொடர்ந்து செய்து வர முடி கருகருவென்று அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
முட்டையைத் தலையில் தடவிக் கொண்டு, அரை மணி நேரம் ஊற விடவேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையைச் சுத்தமாக அலச வேண்டும். முட்டையில் நிறைந்துள்ள சல்ஃபர், ஜிங்க் ,இரும்புச்சத்து , செலினியம், பாஸ்பரஸ் ,அயோடின் மற்றும் அதிக அளவு புரதச்சத்து முடி வளர்ச்சிக்குத் துணை புரியும். இந்த குறிப்பைத் தொடர்ந்து பின்பற்றி வரும் பொழுது முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமான அளவு சூடுபடுத்திக் கொள்ளவும். இதனை மிருதுவாக ஸ்கால்ப்பில் விரல்களைக் கொண்டு சுழற்சி முறையில் தேய்க்கவும். இதனை சில நிமிடங்கள் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளிக்க வேண்டும்.
இப்படி மசாஜ் செய்வதன் மூலம் மயிர்க் கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்வதால் சில மாதங்களிலேயே அடர்த்தியான கூந்தலைப் பெற முடியும்.
கற்றாழையில் உள்ள சதைப்பிடிப்பான பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாதிரி ஜெல் மாதிரியான வழவழப்புத் தன்மை கொண்டது. இதனைத் தலை மற்றும் மயிர்க்கால்களில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்துக் கொள்ள வேண்டும்.
கற்றாழை தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவும். முடியில் ஏற்பட்டுள்ள பிளவுகளைக் குணம் செய்யும். மேலும் தலையில் உள்ள கிருமி தொற்றுகளை அழிக்கும் தன்மை கொண்டது.