முகப்பரு வராமல் தடுக்க உதவும் வழிகள் என்ன...?
பரு வந்து விட்டால் அதை கிள்ள கூடாது. அத்துடன் கொழுப்புப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக தயிர், மாமிசம், சாக்லெட், ஐஸ்க்ரீம், எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொறித்த பலகாரங்களை சாப்பிடக் கூடாது.
பரு உருவாக இன்னொரு முக்கியக் காரணம் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கலை போக்க தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இது தவிர ஒருநாளைக்கு குறைந்தது எட்டு டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு வேளை பருவானது பெருத்து பருத்து பழுத்து விட்டால் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சளை அரைத்து அதைச் சூடாகக் கிளறி, கட்டியின் மேல் வைத்து, பிறகு காலையில் சோப்பு போட்டு சற்று சூடான நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.
பயத்தம் பருப்பு போட்டுக் குளித்தால் எந்தத் தோல் சம்பந்தமான எந்த வியாதியும் நம்மை நெருங்காது. அது போல ஆயுர்வேத சோப்புகள் போட்டுக் குளித்தாலும் பரு உண்டாவதை தடுக்கலாம்.
தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். அவ்வாறு தடவினால் முகப் பரு பிரச்சனை நம்மை அண்டாது.
மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். ஆனால் சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தினமும் குளிக்கும்போது முகத்தில் சோப்புக்குப் பதில் பாசிப்பயறு மாவைத் தேய்த்துக் குளித்துவர முகம் பொலிவு பெறும். கரும் புள்ளிகள் மறையும்.
தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும். காய்ச்சாத பாலை முகத்தில் தடவிவர, முகப்பரு நீங்கும்.