1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (08:06 IST)

மாம்பழத்தோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க.!

Mangoes
சம்மர் சீசனில் பெரும்பாலும் பலர் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடும்போது உடன் சிலவற்றை சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுகுறித்து காண்போம்.


  • மாம்பழமும் பாகற்காயும் எதிரெதிர் சுவை கொண்டவை என்பதால் ஒரே சமயத்தில் இரண்டையும் சாப்பிடக் கூடாது.
  • மாம்பழம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து குடிப்பது நல்லது
  • மாம்பழம் சூடு என்றால், தயிர் குளிர்ச்சியானது. எனவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது.
  • மாம்பழம் சாப்பிட்ட பிறகு கார்பனேற்ற குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • காரமான உணவுகளுடன் இனிப்பான மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
  • சாலட் தயாரிக்கும்போது மாம்பழம், தர்பூசணியை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
  • குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்