திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (18:23 IST)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செர்ரி பழங்கள்..!

Cherry fruit
செர்ரி பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அதனால் அவ்வப்போது செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
அனைவருக்கும் பிடித்த பழமான செர்ரி  பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கலந்து இருக்கும் என்பதும் சிவப்பு நிறம் உடையது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடப்படுகிறது. 
 
அதேபோல் பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம் ஆகியவையும் உள்ளது என்பதால் இந்த பழங்கள் சாப்பிட்டால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
செர்ரி பழங்கள் உடலில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை தரும் வல்லமை உடையது என்றும் மன அழுத்தங்கள் குறையும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran