1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (18:02 IST)

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா? என்ன காரணம்?

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் ஒரு முறை மட்டுமே வரும். சிலருக்கு இரண்டு மாதம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட வரலாம். ஆனால் மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் வந்தால் உடனே அது குறித்து கவனத்தில் கொண்டு மருத்துவராக வேண்டும்.  
 
ஒரே மாதத்தில் இரண்டு இரண்டாவது முறை மாதவிடாய் வந்தால் அது உண்மையில் மாதவிடாய் தானா அல்லது வேறு ஏதேனும் ரத்த கசிவா என்பதே கண்டறிய வேண்டும். பிறப்புறுப்பில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தால் அதை மாதவிடாய் என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. 
 
மேலும் உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல்,  வேறு சில பிரச்சனையின் காரணமாகவும் இரத்தக்கசிவு ஏற்படலாம்.  ஒருவேளை மாதவிடாய் நிற்கும் தருவாயில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பு இருக்கலாம்,. 
 
மாதவிடாய் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருவது தொடர்கதை ஆனால் வேறு சில பிரச்சனைகள் இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 
அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டாலும், மாதவிடாய் தள்ளி போவதற்கு மாத்திரை சாப்பிட்டாலும் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கு வாய்ப்பு இருக்கலாம்.
 
எனவே இரண்டு முறை மாதவிடாய் எப்போதாவது ஒருமுறை வந்தால் பிரச்சனை இல்லை, அடிக்கடி வந்தால் உடனடியாக மருத்துவராக வேண்டும்.
 
Edited by Mahendran