1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (19:15 IST)

இந்த ஒரு எண்ணெய் போதும்.. கண்ணின் கருவளையம் உடனே மறைந்துவிடும்..!

கண்ணின் கருவளையத்தை போக்க பாதாம் எண்ணையை பயன்படுத்தலாம் என்றும் பாதாம் எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்ணில் கருவளையம் மாயமாய் மறைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
பெண்கள் ஆண்கள் என இரு பாலருக்கும் பிரச்சனையாக இருப்பது கண்ணில் கீழ் உள்ள கருவளையம் தான். இந்த கருவளையத்தை நீக்க பல மருந்துகளை தடவி வந்தாலும் அப்படியே இருக்கும் 
 
கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழும் காணப்படும். இந்த நிலையில் வைட்டமின் ஏ டி ஏ இ மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்களை கொண்டுள்ள பாதாம் எண்ணையை கண்ணின் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது. 
 
கருவளையம் இருக்கும் பகுதியில் பாதாம் எண்ணையை லேசாக தடவி மசாஜ் செய்து மறுநாள் காலையில் நன்றாக முகத்தை கழுவி விட்டால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.
 
Edited by Mahendran