வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2023 (13:30 IST)

கொள்ளு தானியத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ பயன்கள்..!

sprouted Kollu
தானிய வகைகளில் ஒன்றான பலரால் பெரிதும் கண்டுக் கொள்ளப்படாத கொள்ளு, ஏராளமான சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.


ஆண்டி ஹைப்பர்கிளைசெமிக் உணவான கொள்ளு சர்க்கரை அளவு உடலில் அதிகரிப்பதை தடுக்கிறது.

கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வலி, ஆஸ்துமா போன்ற நோயினால் ஏற்படும் சுவாச பிரச்சினை சரியாகும்.

கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால் பசியின்மை பிரச்சினை தீரும்.

கொள்ளுவுடன், இந்துப்பை சிறிதளவு சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் சேரும் கற்கள் கரையும்.

கொள்ளுவில் அதிகமான இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளதால் ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க செய்கிறது.

காலையில் தினமும் முளைக்கட்டிய கொள்ளு பயிறை சாப்பிட்டு வர மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.

ஊற வைத்த கொள்ளுவை தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.