வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (20:59 IST)

வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய அன்னாசிப்பூ..!

Annasi Poo
வயிற்றில் உள்ள வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடியது அன்னாசிபூ என்றும் இதை உணவில் சேர்த்தால் எந்தவித நோயும் வராது என்றும் கூறப்படுகிறது. 
 
மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான அன்னாசி பூ நட்சத்திர வடிவில் இருப்பதால் அதை நட்சத்திர பூ என்றும் அழைப்பார்கள். 
 
அன்னாசி பூவை வறுத்து பொடி செய்து மிளகு சீரகத்துடன் கொதிக்க வைத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் சளி காய்ச்சல் இருமை ஆகியவை குணமாகும். 
 
அன்னாசி பூவில் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய அமிலம் இருப்பதால் இது வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை அன்னாசி பூ கட்டுப்படுத்தும் என்றும் திசுக்களில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran