1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (20:25 IST)

குளிர் காலங்களில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்து கொள்வது எப்படி?

தற்போது மழை காலம் நடந்து வரும் நிலையில் அடுத்ததாக குளிர்காலம் வர இருப்பதால் இந்த காலங்களில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.  
 
பொதுவாக வீட்டில் வெதுவெதுப்பான வெப்பநிலை இருக்க வேண்டும் என்றால் ஜன்னல்களில் திரைகளை பயன்படுத்த வேண்டியது அவசியம். சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும் ஜன்னல்கள் மட்டும் விட்டு விட்டு மற்ற ஜன்னல்களில் கெட்டியான துணிகளால் ஆன திரையுகளை பயன்படுத்த வேண்டும். 
 
குறிப்பாக இரவு நேரத்தில் குளிர் காற்று அதிகமாக இருக்கும் என்பதால் மாலை 5 அல்லது 6:00 மணிக்கு அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டால் அறைகளுக்குள் நிலவும் வெப்பம் மாறாமல் இருக்கும்.  
 
அடிக்கடி ஜன்னல்களைத் திறந்து மூடக்கூடாது அவ்வாறு மூடினால் வெளிப்புற குளிர்காற்று அறைகளுக்குள் வந்து அறையின் வெப்பநிலையை மாற்றிவிடும். அதேபோல்  சோபா செட் உள்ளிட்ட பர்னிச்சர்களுக்கு கம்பளி அழுது அழுத்தமான காட்டன் துணியால் தயாரிக்கப்பட்ட உரைகளை பயன்படுத்த வேண்டும். 
 
ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகில் உள்ள பர்னிச்சர்களை சற்று நகர்த்தி வைத்தால் நல்லது.  குளிர் காலங்களில் அறைகளில் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் பயன்படுத்தும் செருப்புகளை பயன்படுத்தலாம். தரையின் குளிர்ச்சி உடலுக்குள் கடத்தாமல் இதனால் தடுக்கப்படும். 
 
 குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி புழங்கும் அறைகளில் மேட் விரித்தும் வெப்பத்தை  தரைதளம் உறிஞ்சி விடாமல் பாதுகாக்கலாம்.
 
Edited by Mahendran