1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:06 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Rain
அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

எனவே காவல்துறை எச்சரிக்கையுடன் இருப்பதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் கூறியுள்ளது.

அதில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.