1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (18:47 IST)

இரவில் தூங்குவதற்கு முன் பல் துலக்கினால் இவ்வளவு நன்மையா?

காலையில் பல் துலக்குவது என்பது அனைவரது நடைமுறையாக இருந்தாலும் இரவில் பல் துலக்கினால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று கூறப்படுகிறது. 
 
இரவில் படுக்கும் முன் பல்லை துலக்குவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பெருக்கம் தடுக்கப்படும் என்றும் பல் சொத்தை ஆகாது என்றும் கூறப்படுகிறது. 
 
இரவில் பல் துலக்காமல் இருந்தால் காலையில் வாய் துர்நாற்றத்துடன் இருக்கும் என்றும் இரவில் சாப்பிட்ட உணவுகள் பற்களின் இடுக்கி தங்கி பாக்டீரியா கிருமிகள் பெருகிவிடும் என்றும் எனவே ஒவ்வொரு நாளும் தவறாமல் இரவில் பற்கலை துலக்க  வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
படுக்கும்முன் பல் துலக்குவதால் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்றும்  பற்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் பல்வேறு பாக்டீரியாக்கள் ரத்த நாளங்களில் நுழைந்து பல நோய்களை உருவாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran