வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (10:15 IST)

இன்றுமுதல் அரைநாள் மட்டுமே பள்ளி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் சிரமத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் அரை நாள் மட்டுமே செயல்படும் என அம்ம மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவுத் திறப்பித்துள்ளது.
 
ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானாவின் அனைத்து பகுதிகளிலும் 38 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் காலை 8 மணி முதல் 12 30 மணி வரை மட்டுமே  செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
12:30 மணிக்கு மாணவ மாணவிகள் சத்துணவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran