திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (23:10 IST)

கிராம சபை கூட்டத்தில் குடிக்க நல்ல தண்ணீர் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

water
உலக தண்ணீர் தினத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குடிக்க நல்ல தண்ணீர் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் - பொதுமக்களின் கேள்விக்கு பதில் கூற முடியாத நிலையில் கிராம சபை கூட்டம் முடிவதற்குள் பிளக்ஸ் பேனர்களை எடுத்துக்கொண்டுகிளம்பிச் சென்ற அரசு அதிகாரிகளால் பரபரப்பு.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பால்ராஜபுரம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற 
 
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 
 
அதில் கடந்த 7 மாதங்களாக நல்ல தண்ணீர் வந்தாலும் அது குடிக்க உகந்தது இல்லை எனவும் 
 
நல்ல தண்ணீர் வேண்டுமென போராடிய மக்கள்
 
கிராமசபை கூட்டத்திலும் கேள்வி கேட்டாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுவரை அதிகாரிகள் 
 
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் தண்ணீரை குடிக்க முடியாத சூழ்நிலையில் வேறு வழி இல்லாமல் அந்த குடிநீர் குடித்தால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறோம் 
 
உலக தண்ணீர் தினத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்த நிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் குடி தண்ணீர் குறித்த கேள்வி கேட்டதற்கு உரிய பதில் அளிக்காத அதிகாரிகளிடம்  பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்து 
 
அங்கு அதிகாரிகள் கிராம சபை கூட்டம் முடிவதற்குள் பிரச்சனை ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் 
 
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
 
நாங்கள் யாரை நம்பி ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தோமோ அவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் வந்தனர்
 
இன்று தண்ணீர் வந்துவிடும் நாளை தந்துவிடும் தண்ணீர் வந்துவிடும் என கூறினார் இதற்கு தீர்வு என்ன?
 
30 நாளுக்குள் நல்ல தண்ணீர் வரவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அந்த கிராம பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்
 
மேலும் கிராமசபை கூட்டம் தீர்மானம் நிறைவடையாத நிலையில் நன்றி உரை கூட கூறவில்லை 
 
இந்நிலையில் அதிகாரிகள் பிளக்ஸ் பேனர்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்
 
நாங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த 7 வார்டு உறுப்பினர்களை காணவில்லை அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.