வியாழன், 19 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (18:41 IST)

கற்றாழை - தேன் இருந்தால் போதும்.. முகம் பளபளப்பாகிவிடும்..!

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து கிரீம்களை வாங்கி தடவி வரும் நிலையில் தேன் மற்றும் கற்றாழை இருந்தால் போதும் குறைந்த செலவில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

கற்றாழை மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் அது முகத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும் என்றும்  முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இருவது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரை முகத்தை கழுவி வேண்டும்.

இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும் என்றும் எண்ணை பிசுக்கு இருக்காது என்றும் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்வதற்கு பதிலாக குறைந்த செலவில் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இந்த முறை உதவும் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran