வியாழன், 19 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (18:30 IST)

பிளாக் டீ, க்ரீன் டீ தெரியும், ஒயிட் டீ தெரியுமா?

பிளாக் டீ மற்றும் கிரீன் டீ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஒயிட் டீ பற்றி கேள்விப்பட்டதுண்டா.

தேயிலைச் செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை மட்டும் பறித்து அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவது தான் ஒயிட் டீ

தேயிலைச் செடியின் குருத்துகள் வெள்ளை நிற இலைகளால் மூடப்பட்டு இருப்பதால் இதற்கு ஒயிட் டீ என்ற பெயர் உண்டானது. இந்த டீ குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்பதும் இதயம், சருமம், மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள்  அதிகம் ஒயிட் டீயில் இருப்பதால் இதனை தொடர்ச்சியாக குடிப்பதால் சருமத்தின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுப்பதோடு, தோல் நோய்களை தடுக்கும்.

 மேலும் உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை எரிக்க உதவுவதால் உடல் எடை குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran