வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (12:38 IST)

ஆற்று மீன் கடல் மீன் எதில் அதிக சத்துக்கள் உள்ளது?

Fish
அசைவ பிரியர்களின் முக்கிய உணவாக மீன் உள்ளது. ஆறு, ஏரி, கடல்களில் இருந்து மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன்கள் வாழும் பகுதியை பொறுத்து அதன் சத்துகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆறு, கடலில் வாழும் மீனில் எது சத்தானது என்பது குறித்து பார்ப்போம்.


  • இறைச்சி உணவுகளில் கொழுப்பு இல்லாத உணவு என்பதால் மீன் மீது பலருக்கும் பிரியம் உள்ளது.
  • மீன்களில் உள்ள ஏராளமான புரதச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானதாக உள்ளது.
  • கடலில் வளரும் மீன்கள், ஆறு, ஏரிகளில் வளரும் மீன்கள் இரண்டிலுமே ஏராளமான புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • ஆனால் கடலில் வளரும் மீன்கள் கடல்பாசியை சாப்பிட்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா 3 என்ற சத்தான அமிலம் உள்ளது.
  • கடல் மீன்களான மத்தி, சங்கரா போன்ற சிறிய மீன்களில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது
  • ஆறு, ஏரிகளில் புழு, பூச்சிகளை சாப்பிட்டு வளரும் மீன்களில் ஒமேகா 3 அமிலம் காணப்படுவதில்லை.
  • ஒமேகா 3 அமிலம் இருப்பதோடு மட்டுமல்லாமல் கடலில் பிடித்து வரப்படுவதால் கடல் மீன்கள் விலை சற்று அதிகமாக இருக்கும்.
  • ஆறு, ஏரிகளில் பிடிக்கப்படும் மீன்களில் ஒமேகா அமிலம் இல்லாவிட்டாலும் குறைந்த விலையில் பல ஊட்டச்சத்துகளை தருகின்றன.
  • ஆற்று மீன்களில் கெண்டை, ஜிலேபி, குறவை போன்ற மீன்கள் அதிக புரதச்சத்து கொண்டுள்ளன.