திருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.. இந்து அமைப்பினர் வாக்குவாதம்..
இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு அதை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த உச்சநீதிமன்றம் நவம்பர் 28ம் தேதியான இன்று கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழக காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால் மத்திய ரிசர்வ் படையை பயன்படுத்தலாம் எனவும் கூறியிருந்தது. மேலும் மலையில் தீபம் ஏற்ற அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க நீதிமன்றம் பரிந்துரை செய்தது..
அதன்படி ஒரு குழு தற்போது அமைக்கப்பட்டு இந்து அமைப்பின் கூறிய இடத்தில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படவிருக்கிறது. இதையடுத்து இந்து அமைப்பினரும், பொது மக்களும் அதை நேரில் பார்ப்பதற்காக திருப்பரங்குன்றம் கோயிலை நோக்கி சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் எல்லோரையும் மலை ஏற அனுமதிக்கவில்லை.
மேலே பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இடத்தை ஆய்வு செய்த CRPF வீரர்களும், காவல்துறையினரும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி என முடிவெடுத்துள்ளனர். ஆனால், இதை இந்து அமைப்பினர் ஏற்கவில்லை. எனவே, சி.ஆர்.பி.எப் வீரர்களுடனும், தமிழக காவல்துறை அதிகாரிகளுடனும் வாக்குவாதம் செய்து வருகிறார்கள்..
தீபம் ஏற்றப்பட இருக்கிறது.. அதை பார்ப்பதற்கு பல ஏற்பாடுகள் செய்யவிருக்கிறது.. நீங்கள் மலையோர வேண்டாம். எல்லோருக்கும் அனுமதி இல்லை என பலமுறை கூறியும் அங்கிருந்து அவர்கள் கடந்து செல்லாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.