1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 அக்டோபர் 2024 (11:11 IST)

இன்று மீண்டும் தங்கம் விலை குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Gold
சமீப காலமாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது போல் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய்   7,025  என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய்  56,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,480  எனவும் ஒரு சவரன் ரூபாய் 59,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva