வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (13:15 IST)

தானாகவே மறையும் மெசேஜஸ்: வாட்ஸ் ஆப் கோளாறா??

வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மெசேஜ் தானாக மறைந்து விடுமாம், இது வாட்ஸ் ஆப் கோளாறு அல்ல வாட்ஸ் ஆப் புது அப்டேட். 
 
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தானாகவே மெசேஜ் அழியும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளது. 
 
ஆம், நாம் அனுப்பிய மெசேஜ், குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் தானாகவே மறையும் வகையில் இந்த அப்டேட் இருக்குமாம். முக்கியமாக செய்திகளை அனுப்பும் போதும், மற்றவர்களிடம் இது நீண்ட நாட்கள் இருக்க கூடாது என நினைப்பவர்களுக்கும், அல்லது இது ஒரு ஆதாரமாக இருக்க கூடாது என எண்ணுபவர்களுக்கும் இந்த வசதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நாம் ஒரு மெஜேச் அனுப்பும் முன்னர் செட்டிங்சில், 5 விநாடிகள் அல்லது ஒரு மணி நேரத்தில் இந்த மெசேஜ் மறைய வேண்டும் என ஆப்ஷனை தேர்வு செய்து பின்னர் மெசேஜ் அனுப்பினால், தானாவே குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் மெசேஜ் மறைந்துவிடும். 
 
முதற்கட்டமாக இது க்ரூப் சேட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் பின்னரே பிரைவேட் சேட்டில் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அப்டேட், எந்த வெர்ஷனில் எப்போது வரும் என்ற அதிகாரப்பூர்வ தேதி தெரிவிக்கப்படவில்லை.