1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (13:01 IST)

வாட்ஸ் ஆப் டார்க் மோட்: கவனிக்கப்பட வேண்டியவை என்ன??

வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த வாட்ஸ் ஆப் டார்க் மோட் அப்டேட்டை வழங்கியுள்ளது. 
 
சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்குள் 3 புதிய அப்டேட்டுகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  
 
அந்த மூன்று அப்டேட்ஸ் என்னவெனில், வாட்ஸ் ஆப் டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ். இந்நிலையில் வாட்ஸ் ஆப் டார்க் மோட் அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
வாட்ஸ் ஆப் டார்க் மோடில் கவனிக்கப்பட வேண்டியவை: 
பயனர்களின் ரீடபிலிட்டிக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தாத வகையில் டார்க் தீம் முழுமையாக கருப்பாக இல்லாமல் க்ரே ஷேட் கொண்டிருக்கிறது.
 
சாட் பாக்ஸ் க்ரே ஷேட் பேக்கிரவுண்டு கொண்டிருக்கும் நிலையில், மெசேஜ் அனைத்தும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. 
 
ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் புதிய டார்க் மோட் அம்சத்தை செட்டிங்க்ஸ் மெனுவில் பெற முடியும். 
 
ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கும் முந்தைய இயங்குதளங்களை பயன்படுத்துவோர் வாட்ஸ் ஆப் செட்டிங் - சாட்ஸ் - தீம் - டார்க் என ஆப்ஷன்சை தேர்வு செய்ய வேண்டும்.