புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:33 IST)

அரசியலில் இறங்கிய மனைவி;பிடிக்காத கணவன் – வீடியோ கால் பேசும் போது நடந்த கொடூரம் !

சுட்டுக் கொல்லப்பட்ட முனைஸ்

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கணவர் தன் மனைவி அரசியலில் இறங்கியதால் பிடிக்காமல் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் சுனில் கோத்ரா என்பவரின் மனைவி முனைஸ். அரசியலில் ஆர்வம் முனைஸ் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். இது அவரது கணவருக்குப் பிடிக்கவில்லை. மேலும் தன் மனைவி அடிக்கடி வீடியோ கால்களில் பேசுவதைப் பார்த்து வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முனைஸ் தனது சகோதரியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்த போது அதைப் பார்த்த சுனில் துப்பாக்கியை எடுத்து இருமுறை மனைவியை சுட்டுள்ளார். இதை எதிர்பார்க்காத முனைஸ் ‘என் கணவர் என்னை சுட்டு விட்டார்’ எனக் கூறி விட்டு இறந்துள்ளார். இதையடுத்து முனைஸின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சுனில் கோத்ராவை கைது செய்த போலிஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.