வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (10:36 IST)

ஆபத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்... தீர்வு என்ன? வாட்ஸ் ஆப் பகீர் தகவல்!!

வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
சமூக வலைத்தளங்கள் மக்கள் மூழ்கியிருக்கும் நிலையில், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள வாட்ஸ் ஆப் எளிமையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பின் மூலம் செய்தி அனுப்புதல், போட்டோ மற்றும் வீடியோ அனுப்புதல், அழைப்புகள் மேற்கொள்ளுதல் ஆகியவை எளிமையாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆம், ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் மூலம் கால் செய்கிறார்கள், அப்போது தானாகவே உங்களது ஸ்மார்ட்போனை கண்காணிக்கும் சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிவிடும். 
இதன் பின்னர் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக்கர்களின் கண்காணிப்பில் கட்டுப்பாட்டில் இருக்கும் என பகீர் செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை தடுக்க உடனடியாக வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 
 
தற்போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.