வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (11:45 IST)

வாட்சாப் - இன்ஸ்டாகிராம் - ஃபேஸ்புக் மெசஞ்சர் இணைப்புக்கு திட்டம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசன்ஜர் ஆகிய அதன் சமூக வலையமைப்பு செய்தி சேவைகளை ஒருங்கிணைக்க ஃபேஸ்புக் திட்டமிட்டு வருவதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
 

இதில் ஈடுபட்டுள்ள 4 பேரை மேற்கோள் காட்டியுள்ள இந்த செய்தித்தாள், அவர்களின் பெயரை வெளியிடவில்லை.

இந்த 3 சேவைகளும் தனித்தனி செயலிகளாக செயல்படுவது தொடர்ந்தாலும், ஆழமான மட்டத்தில், செய்திகளோடு அவை தொடர்புடையதாக இருப்பதால் வேறுப்பட்ட சேவைகளுக்கு இடையில் செயல்படுவதாகவும் அமையும்.

இந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், ஒரு ஃபேஸ்புக் பயனர் மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியை வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே இருக்கும் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். இந்த ஆப்-களுக்கு பொதுவான தளம் இல்லாததால் தற்போது இதனை செய்ய முடியவதில்லை.

நீண்டதொரு செயல்முறையின் தொடக்கத்தில் உள்ளதாக ஃபேஸ்புக், பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சாக்கர்பர்க்-கின் தனிப்பட்ட பணித்திட்டம் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

இந்த பணித்திட்டம் ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது,

12 மாதங்களில் இந்த பணித்திட்டத்தை முடிக்க .ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூன்று சேவைகளை மேலும் பயனுள்ள முறையில் வழங்கவும், இந்த செயலிகளில் மக்கள் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் சக்கர்பர்க் இந்த ஒருங்கிணைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.