சரியும் ஜியோவை மொத்தமாய் சரிக்கும் வோடபோன்! இரட்டிப்பான ஆஃபர்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 18 அக்டோபர் 2019 (13:37 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை மொத்தமாக சரிக்க வோடபோன் நிறுவனம் தனது சலுகைகளை இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளது. 
 
சமீப காலமாக அனைத்து நெட்வொர்க்குகளும் அன்லிமிடெட் அழைப்புகளை அளித்து வந்த நிலையில், திடீரென ஜியோ நிறுவனம் தனது நெட்வொர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்தது. 
 
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மற்ற மொபைல் நெட்வொர்க்குகள் தங்களது இலவச சேவைகள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றன. குறிப்பாக வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் இதுதன வாய்ப்பு என மும்முறமாய் செயல்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் வோடபோன் நிறுவனம், வழங்கி வந்த சில ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவை இரட்டிபாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி, ரூ.199 ப்ளான் மற்றும் ரூ.399 ப்ளானில் வழங்கப்பட்டு வந்த கேட்டா டபுளாக்கப்பட்டுள்ளது. 
 
இது வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜியோவிற்கு இது நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :