புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (11:32 IST)

உண்மையான வெற்றி தேர்தலில் தெரியும் – ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆதங்கம் !

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 9 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொளவதாக அறிவித்து இன்று முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு ன்ஜிஒ சங்கம், கு.ப. சங்கம், நீதித் துறைப் பணியாளர் சங்கம், மருத்துவ ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் மற்றும் சார்நிலைக் கருவூல ஊழியர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு அளித்தன.

ஆனாலும் அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்தது. இதையடுத்து மாணவர்களூக்கு தேர்வுகள் தொடங்க இருப்பதாலும் அடுத்த வாரம் முதல் செய்முறைத் தேர்வுகள் நடக்க இருப்பதாலும் ஆசிரியர்கள் தற்போது தற்காலிகமாக 9 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மீண்டும் பிப்ரவரி இறுதியில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போது ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று நிறைவேற்றினால் அது தேர்தல் விதிமுறை மீறலாக மாறும் என்பதால்தான் அரசு இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு இறங்கி வர மறுக்கிறது எனக் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ‘இப்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்து வெற்றி பெற்று விட்டதாக அதிமுக அரசு நினைக்கலாம். ஆனால் உண்மையான வெற்றி தேர்தலில் தெரியும். அப்போது அரசு ஊழியர்களின் மதிப்பு தெரியவரும்’ என ஆதங்கமாகப் பேசியுள்ளனர்.