1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (12:16 IST)

வோடபோன் DOUBLE DATA ஆஃபரை பெறுவது எப்படி?

வோடபோன் நிறுவனம் தனது இரண்டு ரீசார்ஜ் திட்டத்தின் மீது டபுள் டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
வோடபோன் நிறுவனம், தனது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டாவை இரட்டிபாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது டபுள் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதன் படி, ரூ.199 ப்ளான் மற்றும் ரூ.399 ப்ளானில் வழங்கப்பட்டு வந்த கேட்டா டபுளாக்கப்பட்டுள்ளது. 
 
ரூ.199 ரீசார்ஜ்:
இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 3 ஜிபி வழங்கப்படுகிறது. அதோடு, அன்லிமிடெட் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
ரூ.399 ரீசார்ஜ்:
இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 ஜிபி வழங்கப்படுகிறது. அதோடு, அன்லிமிடெட் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
டபுள் டேட்டா ஆஃபரை பெறுவது எப்படி? 
இந்த ஆஃபர் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை  வோடபோன் வலைத்தளம் அல்லது MyVodafone App மூலமாக பார்க்க வேண்டும். உங்களது எண்ணிற்கான Recommended plans பிரிவின் கீழ் இந்த டபுள் டேட்டா அவர் இருந்தால் நீங்கள் ரீசார்க் செய்து டபுள் டேட்டாவை என்ஜாய் பண்ணலாம்.