திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (14:54 IST)

ஜியோவுக்கு நேரடி போட்டியான வோடபோன்: ஏர்டெல் அதிர்ச்சி!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018 புத்தாண்டை முன்னிட்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வோடபோன் நிறுவனம் ஜியோவுக்கு நேரடி போட்டியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. 
 
வோடபோன் அறிவித்துள்ள சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் காலிங், தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதோடு நிறுத்தாமல் மேலும், இரண்டு புதிய சலுகைகளையும் அறிவித்துள்ளது.
 
ரூ.198 ரீசார்ஜ்:
ரூ.198 விலையில் ரீசார்ஜ் செய்யும் போது அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ரோமிங், 100 எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. 
 
ரூ.229 ரீசார்ஜ்: 
ரூ.229 சலுகையில் வாடிக்கயைாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் அழைப்புகள், இலவச ரோமிங், 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை புதிய வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.
 
வோடபோனின் சலுகைகள் ஜியோவுக்கு போட்டியாக மட்டும் அல்லாமல் ஏர்டெல்லுக்கும் போட்டியாக உள்ளதால், ஏர்டெல் நிறுவனம் தனது அடுத்தகட்ட சலுகை திட்டங்களை தீட்டி வருகிறது.