1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:29 IST)

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!

ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக் அச்மார்ட்போன் தயரிப்பில் இறங்கிய வோடபோன் தற்போது புதிய சலுகை ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


 
 
வோடபோனின் ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 90 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இந்த திட்டம் தற்சமயம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த கால தீபாவளி சலுகையா அல்லது தீபாவளிக்கு பின்பும் வழங்கப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை.
 
போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் வழங்கபப்டும் திட்டத்தில் ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சலுகைகள் சார்ந்த தகவல்களை 9582566666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற முடியும்.