1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (20:09 IST)

கட்டண மாற்றங்கள்: லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு?

ஒரு மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர் பிற நெட்வொர்க் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கும் போது, இணைப்பு சேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


 
 
இந்த அழைப்பு கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த கட்டண விதிமுறைகள் வழக்கத்திற்கு வருகிறது.
 
முன்னர் நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இக்கட்டணம் தற்போது 6 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
 
மேலும், 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் இக்கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேசமயம் அழைப்பு இணைப்பு கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டால் இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும். 
 
ஆனால், இதன் மூலம் லாபம் சம்பாதிக்க போவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான். மேலும், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.2,000 - ரூ.3,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.