திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (15:42 IST)

வோடபோன் ரெட்: 30 ஜிபி டேட்டா, ரூ.4000 மற்றும் பல....

வோடபோன் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ரெட் மூலம் அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. அதை பெற்றிய தகவல்கள் பின்வருமாறு...
 
புதிய வோடபோன் ரெட் திட்டத்தின் விலை ரூ.399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங், 100 எஸ்எம்எஸ், மாதம் 30 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
மேலும், ஒரு வருடத்திற்கான வோடபோன் பிளே சேவை மற்றும் ரூ.4000 மதிப்புள்ள திரைப்படங்களை இலவசமாக காணும் வசதி, மேக்ஸ்டர் சந்தா 4 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வோடபோன் ரெட் ஷீல்டு சேவையும் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. 
 
இந்த திட்டம் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.