திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2019 (17:31 IST)

101 ரூவாக்கு ஸ்மார்ட்போன்!! பரனையில இருந்த பழைய ஆஃபரை தூசி தட்டிய விவோ...

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் ரூ.101 கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்களாம் என தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. 

 
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ ஆஃப்லைன் சந்தையை குறிவைத்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. சலுகையின் படி வாடிக்கையாளர்கள் ரூ. 101 மட்டும் செலுத்தி புதிய விவோ ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். 
 
இதன் பின்னர் ஸ்மார்ட்போனுக்கான மீத தொகையை மாத தவணையாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு தீபாவளி சலுகை அக்டோபர் 31 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். 
இந்த சலுகையின் கீழ் விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ, வி15 ப்ரோ, இசட்1எக்ஸ் (8 ஜிபி), வி15, எஸ்1, வை17, வை15 மற்றும் வை12 ஆகிய ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். 
 
இதை தவிர்த்து, சலுகைக்கு ஹெச்டிபி வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது 10% கேஷ்பேக், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
 
விவோ இந்த சலுகை புதியது ஒன்றும் அல்ல, கடந்த ஆண்டு கிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகையாக இதே சலுகையைதான் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.