1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (18:48 IST)

ஏர்டெல்லை எதிர்த்து புதுவேகம் காட்டிய ஜியோ!!

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜியோ அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் அனைத்து சேவைகளையும் இலவசமாய் வழங்கியது. அதன் பின்னர் இலவச சேவைகளை நீட்டிக்கவும் செய்தது. இதனால், ஜியோ அதிகப்படியான வாடிக்கையாளர்களை கைப்பற்றியது. 
 
துவக்கத்தில், ஜியோவின் இணைய வேகம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்தனர். ஏர்டெல் மட்டுமே அதிக இணைய வேகம் கொண்டுள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகளை சரிசெய்து, ஜியோவின் வேகத்தை பழைய நிலைக்கே கொண்டு வந்தது.
 
இந்நிலையில் டிராய் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், அதிவேக மொபைல் டேட்டா சேவையில் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஜியோவின் சராசரி டவுன்லோடு வேகம் இப்போது நொடிக்கு 19.6 எம்பி முதல் 25.2 வரை உயர்ந்துள்ளது. 
 
மேலும் கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நொடிக்கு 21.8 எம்பி வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது. செப்டம்பர் மாத வாக்கில் டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9 எம்பி வரை இருந்தது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களது அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.