வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 மே 2018 (16:26 IST)

துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை

மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை சிறை பிடித்து, வங்கியில் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவையும் எடுத்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸார், அருகிலிருக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
சமீபத்தில் இதே போல் மதுரை இந்தியன் வங்கியில், பட்டப்பகலில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.