1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (14:45 IST)

ப்ராண்ட் நியூ வேரியண்ட் கேலக்சி M30s-ஐ களமிறக்கிய சாம்சங்!!

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்டை அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்10 மாடலின் மேம்பட்ட மாடல்தான் கேலக்ஸி எம்10எஸ். 
 
இந்நிலையில், சாம்சங் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம்30எஸ் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்சி M30s சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884பி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி; 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி 
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2; 8 எம்.பி. செல்ஃபி கேமரா
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்