திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2019 (13:52 IST)

விலைய கேட்டா கேமரா மட்டுமில்ல தலையும் சேர்த்து சுத்தும்... சாம்சங் புது வரவு!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிசின் டாப் எண்ட் மாடலாகும். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU
# ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
# 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
# 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.2, 3D டெப்த் கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம், டால்பி அட்மோஸ்
# 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறன், 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சன் என்னவெனில், புகைப்படங்களை எடுக்க சுழலும் கேமரா மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, செல்ஃபி மோட் தேர்வு செய்தால், மூன்று கேமராக்களும் பாப்-அப் முறையில் மேல் எழுந்து பின் முன்புறமாக சுழலும்.
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,445 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.