1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (20:07 IST)

நோக்கியா ஸ்மார்ட்போன் மீது ரூ.8000 வரை தள்ளுபடி!

நோக்கியா நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தான்விட்ட இடத்தை பிடிக்க முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. நோக்கியா நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களின் விலையில் தள்ளுபடி வழங்கியுள்ளது. 
 
நோக்கியா 5 (2 ஜிபி) மாடலின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், ரூ.36,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நோக்கியா ரூ.8000 விலை குறைக்கப்பட்டு ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:
# 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
# 3 ஜிபி ராம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
# 3000 எம்ஏஎச் பேட்டரி
 
நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:
# 5.3 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் HD LCD டிஸ்ப்ளே
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா, ஹைப்ரிட் டூயல் சிம்
# கைரேகை ஸ்கேனர், 3090 எம்ஏஎச் பேட்டரி