திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (16:29 IST)

கிரிப்ட்டோ கரன்ஸி: ஆன்லைனில் ரூ.1 கோடி வரை மோசடி...

உலகம் முழுவதும் கிரிப்ட்டோ கரன்ஸி பிரபலமடைந்து வருகிறது. அதில் பிட்காயினும் ஒன்று. கிரிப்டோகரன்ஸி முறைகள் எந்த அரசையும் சார்ந்து இருப்பதில்லை. இது ஆன்லைனில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. சில உலக நாடுகள் கிரிப்ட்டோ கரன்ஸிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. 
 
இந்நிலையில், அமெரிக்காவில் கிரிப்ட்டோ கரன்ஸி பெயரில் ரூ.1 கோடி அளவுக்கு ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்பர்ட்டி ஐசிஓ என்ற இ-வாலட் நிறுவனம் எத்திரீயம் என்ற கிரிப்டோகரன்ஸியை விற்பனை செய்வதாக அறிவித்தது. 
 
இதற்காக பலரும் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஹேக்கர்கள் எக்ஸ்பர்ட்டி நிறுவனத்தின் தகவல்களை திருடி அந்த நிறுவனத்தின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளனர்.  
 
இதனால் எத்திரீயம் கிரிப்டோ கரன்ஸியை வாங்க 71 பேர் முன்பணம் செலுத்தியுள்ளது. இதன் பின்னர் பணம் செலுத்தியவர்கள் எப்போது கிரிப்டோகரன்ஸி வரும் என எக்ஸ்பர்ட்டி இ-வாலட் நிறுவனத்தை அழைத்து கேட்டுள்ளனர். 
 
நிறுவனத்தின் தரப்பில் யாருக்கும் இ-மெயில் அனுப்பவில்லை என் கூறப்பட்ட பின்னர் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலீஸுக்கு புகார் அளித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் மூலம் அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.