செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:10 IST)

#Switch_To_BSNL: ஜியோவை அடிச்சு தூக்க வந்துட்டான் BSNL 4G!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Switch_To_BSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
 
#Switch_To_BSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிரது. இதற்கு முன்னர் மைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து இப்போது டிவிட்டரில் பிஎஸ்என்எல் டிரெண்டாகி வருகிறது 
 
தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 
ஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்கும் பயனர்கள் மீது வினாடிக்கு 6 பைசா கட்டணம் விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இது பிஎஸ்என்எல் 4ஜி-க்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. 
 
மேலும், பிஎஸ்என்எல் எப்போதும் தேசத்தின் சேவக்யில் ஈடுப்பட்டு வருகிறது. இயற்கை பேரிடர் காலங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் தனது வாடிகையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.