அம்பானி கிளப்பிய புயல்; நொந்து நூடுல்ஸ் ஆன ஏர்டெல், வோடபோன்!!

Last Updated: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (17:47 IST)
முகேஷ் அம்பானி வெளியிட்ட சில அறிவிப்புகளால் ஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளது. 
 
ரிலையன்ஸ் குழும வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார். 
 
இந்த அறிவிப்புகளால் மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை ஜியோவை மிஞ்சும் வகையில் இருக்க வேண்டுமே என்ற கலக்கத்தில் உள்ளது. முகேஷ் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ குறித்த முழு அறிவிப்பு விவரங்கள் பின்வருமாறு... 
# உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது
# அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணைய வேண்டும் என்பதே ஜியோவின் கனவு 
# ஜியோவுக்கு 500 மில்லியன் சந்தாதாரர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 
# ஜியோ ஹோம் பிராட்பேண்ட் சேவை இணைப்பு அறிமுகம்
# ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்
# செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் ஜியோ ஃபைபர் அறிமுகம் 
# ஜியோ பைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி-யாக அதிகரிக்கப்பட்டுள்ளது 
# 1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்றடையும்
# ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4K TV & செட் டாப் பாக்ஸ் இலவசம்
# ஜியோ செட் டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் 
# ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் ரூ.700 முதல் ரூ.10000 வரை சந்தா தொகை
# 18 மாதங்களில் கடன் இல்லாத நிறுவனம் என்ற பெயரை பெரும் வகையில் ஜியோ பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :