வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (13:00 IST)

கம்மி விலையில் விற்பனைக்கு லைன் கட்டி வரும் Redmi!!

சியோமி நிறுவனத்தின் Redmi Note 9S ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 
 
சியோமி நிறுவனம தனது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் தான் Redmi Note 9 ப்ரோ, Redmi Note 9 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது இந்த வரிசையில் Redmi Note 9S ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது. 
 
கடந்த ஆண்டு வெளியான Redmi Note 7S ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக  Redmi Note 9S இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.12,000 என்ற சிறப்பு விலையில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.