விலை குறைப்பு இல்ல, அதுக்கும் மேல... ஸ்மார்ட்போனை ஃப்ரீயா வழக்கும் ரெட்மி!

Last Updated: புதன், 26 ஜூன் 2019 (14:03 IST)
சியோமி நிறுவனம் 5 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் சியோமி நிறுவனம் வெற்றிகரமாக 4 ஆண்டுகளை கடந்து 5வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. ஆண்டு விழா கொண்டாட்டங்களின் போது சியோமி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். 
 
அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாத்தில் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  ரெட்மி 7 சீரிஸ் ஸ்மார்ட்போனை 20 நாட்களுக்கு 20 பேருக்கு இலவசமாக வழங்கவுள்ளதாம். அதாவது வாரத்திற்கு 5 ஸ்மார்ட்போன் இலவசம். 
ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை நடைபெறுவதாக கூறப்படும் இந்த சிறப்பு சலுகையில் ஒரு ரெட்மி நோட் 7S, இரண்டு ரெட்மி நோட் 7, இரண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வழங்கப்படுமாம். 
 
இந்த சலுகை இன்னும் அதிகாரப்பூர்வ தகவலாக வெளியாக நிலையில், ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ மற்றும் எம்ஐ ட்ரிம்மர் அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :